|
- Devi Sri Prasad Yaendi Yaendi 歌词
- Devi Sri Prasad
வானவில் வட்டமாகுதே வானமே கிட்ட வருதே மேகங்கள் மண்ணில் இறங்கி தோகைக்கு ஆடை கட்டுதே இரவெல்லாம் வெயிலாகிப் போக பகலெல்லாம் இருளாகிப் போக பருவங்கள் வேசம் போடுதே
அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர? அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற? அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற? அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற?
~ இசை ~
கட்டி கட்டி தங்கக் கட்டி கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு நட்சத்திரம் ஒரு கோடி ஏ அழகின் மானே வா மடிமேலே புள்ளிமான் புடிபட்டுப் போச்சு புலி கையில் அடிபட்டுப் போச்சு விடுபட்டு எங்கே போவது?
அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர? அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற? அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற? அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற?
~ இசை ~
பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல பேச்சுக்குள்ள தோடி ராகம் முத்தமிட்டு மூச்சுவிட்டா மூச்சுக்குள்ள ரோஜா வாசம் தேன் வழியும் பொன்னே வா கமலப் பெண்ணே இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய் கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய் மடிதொட்டு எங்கே போகிறாய்?
அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர? அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற? அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற? அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற?
|
|
|